×

கோடைகாலத்திலும் வற்றாத ஏரி வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் 110 பறவை இனங்கள் குவிந்தன

*சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மன்னார்குடி : கோடைகாலத்திலும் ஏரியில் தண்ணீர் உள்ளதால், வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் 110 பறவை இனங்கள் வந்து குவிந்துள்ளன.

இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூரில் சுமார் 316 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ஏரி அமைந்துள்ளது.

இங்கு பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக திகழும் இந்த சரணாலயம் ராம்சார்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த ஏரியைச் சுற்றி வளமான ஈர நிலங்கள் அதிக அளவில் உள்ளதால் ஆண்டு தோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பறவைகள் வந்து செல்கிறது.

மார்ச் மாதம் இறுதி முதல் கோடை காலம் தொடங்குவதால் இந்த ஏரியில் தண்ணீர் வரத்து குறைந்து ஏப்ரல் மே மாதங்களில் முழுமையாக வற்றிவிடும். மேலும் இந்த ஏரியில் கடந்த சில மாதங்களாக பரவியிருந்த வேலிக்கருவைகள், ஆகாயத்தாமரைகள் மற்றும் காட்டாமணக்குகள் ஏரியின் நீர்மட்டத்தை வெகுவாக குறைத்தது.

இதையடுத்து, திருவாரூர் மாவட்ட வனத்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக ஆகாயத்தாமரைகள் பெரும்பாலும் அகற்றப்பட்டன. மேலும் ஏரியின் பல பகுதிகளில் தண்ணீர் நிரந்தரமாக தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதன் காரணமாக தற்போது நிலவிவரும் கடும் கோடை காலத்திலும் வடுவூர் ஏரியில் தேவையான அளவு தண்ணீர் தேங்கியுள்ளது.

அவனைத் தொடர்ந்து இந்த ஏரிக்கு தற்போது ஏராளமான நீர் நாய்கள் வந்துள்ளன. இந்த நீர் நாய்கள் ஏரியின் திட்டுக்களில் விளையாடி மகிழ்கிறது. மேலும் தண்ணீரில் நீந்தி விளையாடுகிறது.

மேலும் கோடை காலமான தற்போது ஆசியா கண்டத்தை சேர்ந்த ஓவன் பில் நாரை பறவைகள் உள்பட 110 பறவை இனங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பறவைகள் தற்போது இந்த சரணாலயத்தில் வந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Lake Vaduvur Bird Sanctuary ,Mannarkudi ,Vaduur Bird Sanctuary ,Thiruvarur district ,Vaduur ,
× RELATED கரூரில் மூதாட்டியை கொன்றவர் சென்னையில் கைது