×

பெரியாண்டாங்கோயில் பகுதியில் தண்ணீர் ஓட முடியாத அளவிற்கு வாய்க்காலில் வளர்ந்து மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை

*அகற்றிட கோரிக்கை

கரூர் : கரூர் மாவட்டம் பெரியாண்டாங்கோயில் பகுதியில் வழியாக செல்லும் வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை விரை ந்து அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தாண்டியும், பெரியாண்டாங்கோயில் போன்ற பகுதிகளில் பாசன வாய்க்கால் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.மழைக்காலங்களில் இந்த பாசன வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் சென்று பாசனத்துக்கு உதவியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வாய்க்காலில் அதிகளவு ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து மண்டிக்கிடக்கின்றன.இது போன்ற செடிகள் தண்ணீர் ஓடுவதை தடுக்கும் திறன் கொண்டவையாக உள்ளன.

எனவே இதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு இதனை முற்றிலும் அகற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Akayathamar ,Periandango ,KARUR ,PERIANDANGOIL ,KARUR DISTRICT ,Karur Municipality ,Irrigation Gorge ,
× RELATED வால்பாறை பகுதியில் மாசோப்சிஸ்...