பஞ்சாப்புக்கு எதிரான போட்டி ராஜஸ்தான் அபார வெற்றி

சண்டிகர்: ஐபிஎல் 19வது தொடரில் நேற்று சண்டிகர் மைதானத்தில் நடந்த 40வது ேபாட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்ய பஞ்சாப் கிங்ஸ் ஓபனர்களாக பிராப்சிம்ரன் சிங், பிரியான்ஸ் ஆர்யா களமிறங்கி அதிரடியாக விளையாடினர். ஸ்கோர் 37 ரன்னாக இருந்தபோது பிரியான்ஸ் ஆர்யா 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கூப்பர் கானோலி தனது பங்கிற்கு 30 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருடன் ேஜாடி சேர்ந்த பிராப்சிம்ரன் சிங் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து அரை சதம் அடித்த நிலையில் 59 ரன்கள் (44 பந்து, 6 போர், 1 சிக்ஸ்) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்ரேயாஸ் அய்யரும் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆக கடைசியில் வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் ராஜஸ்தான் பவுலர்களை பந்தாடி அரை சதத்தை கடந்து இறுதிவரை அவுட் ஆகாமல் 62 ரன்கள் (22 பந்து, 4 போர், 6 சிக்ஸ்) எடுத்தார்.

இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் யாஷ் ராஜ் 2 விக்கெட், ஜோப்ரா ஆர்ச்சர், பர்கர் தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவரில் 228 ரன்களை எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

Related Stories: