×

இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் உட்பட 6 பேர் கைது

மண்டபம்: மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 4 அகதிகள் மற்றும் 2 படகோட்டிகளை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மண்டபம் சிறுவர் பூங்கா அருகே உள்ள விநாயகர் கோயில் தெற்கு கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 6 பேரை அழைத்து விசாரணை செய்தனர். அதில் இலங்கை யாழ்ப்பாணம், குருநகர் பகுதியை சேர்ந்த ஜிம்ஸ்ரிவ் (48), இவரது மனைவி ராஜினி (47), மகள் திபேந்தினி (20) ஆகியோர் என தெரிய வந்தது. மேலும், கடந்த 2023ம் ஆண்டு, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ராமேஸ்வரம் வந்து, பின்னர் அரசு உதவியுடன் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்துள்ளனர்.

அதேபோன்று, இலங்கை மன்னார் பேசாளை முருகன் கோயில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (எ) முத்துக்குமரன்(44), கடந்த செப்.2022ம் ஆண்டு பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்துள்ளார். விசா காலம் முடிந்து இலங்கைக்குச் செல்லாமல் மண்டபத்தில் ரகசியமாக வசித்து வந்துள்ளார். இவர்கள் நாட்டுப்படகில் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக படகோட்டிகளான மண்டபத்தை சேர்ந்த விஜய் (26), கோபி(28) ஆகியோரை அணுகியுள்ளனர். தகவலறிந்த மண்டபம் போலீசார் வழக்கு பதிந்து 6 பேரையும் நேற்று கைது செய்தனர்.

Tags : Sri Lanka ,Ramanathapuram district ,Mundinam ,Vinayagar ,
× RELATED உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க...