×

ஆவடி, பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அறிவிப்பு

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஆவடி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிகளின் திமுக வாக்கு என்னும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் வரும் மே 2ம் தேதி மாலை 4 மணியளவில் ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை பகுதியில் உள்ள ஜெய் கிறிஷ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ம.ராஜி தலைமை தாங்குகிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, நடுக்குத்தகை கே.ஜே.ரமேஷ், தொகுதி பார்வையாளர்கள் பிடிசி.செல்வராஜ், நிவேதா ஜெசிகா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன், மாநில சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் சி.ஜெரால்டு, மாவட்ட நிர்வாகிகள் வி.ஜெ.சினிவசன், எஸ்.ஜெயபாலன், காயத்திரி தரன், பா.நரேஷ் குமார், த.எத்திராஜ், ஜி.விமல்வர்ஷன், எம்.முத்தமிழ்செல்வன், வி.குமார், ஜெ.மகாதேவன், காஞ்சனா சுதாகர், எஸ்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில் வரும் மே 4ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதால் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக செயலாளர்கள், வாக்கு எண்ணும் முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 

Tags : Avadi ,Poonamalli Assembly Constituencies' ,Agents' ,Minister ,Avadi S.M. Nassar ,Thiruvallur ,DMK ,Poonamalli Assembly Constituencies ,Pattabiram Dandurai ,Tiruvallur Central District DMK… ,
× RELATED இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில்...