×

விஜய் கட்சி அமைச்சரவை பட்டியல் போகாத ஊருக்கு வழி காட்டுவது போல் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

கொடைக்கானல்: போகாத ஊருக்கு வழி காட்டுவது போல் உள்ளது விஜய் கட்சி அமைச்சரவை பட்டியல் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு நேற்று வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேல்மலை மலைக்கிராமம் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தான் வரும். தற்போது பதிவாகிய வாக்கு சதவீதம் என்பது பெரிய வித்தியாசம் இல்லை. எஸ்ஐஆர் காரணமாக வாக்கு சதவீதம் உயரவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டாக களத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றி உள்ளோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு தேர்தல் பணிகளை திறம்பட கையாள கொடுத்துள்ளார்.

தற்போது அதை நிறைவேற்றியுள்ளோம். நாங்கள் உற்சாகமாக உள்ளதால் வெளியில் சென்று ஓய்வெடுத்து வருகிறோம். போகாத ஊருக்கு வழி காட்டுவது போலும், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போலும் உள்ளது விஜய் கட்சி அமைச்சரவை பட்டியல். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vijay Party ,Minister ,Sekar Babu ,Kodaikanal ,Charities ,Kodaikanal, Dindigul district ,
× RELATED உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க...