- வெள்ளியூர்
- Uthukottai
- தாமரைபாக்கம்
- பெரியபாளையம்
- திருவள்ளூர்-தாமரைப்பாக்கம் நெடுஞ்சாலை
- கரிகலாவகம்
- அமனம்பாக்கம்
- மாகரல்
- Kannikapuram
- சேதுப்பாக்கம்…
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் அருகே உள்ள வெள்ளியூர் ஊராட்சியில், திருவள்ளூர்-தாமரைப்பாக்கம் நெடுஞ்சாலையை ஒட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் நிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் வெள்ளியூர், கரிகலவாக்கம், தாமரைப்பாக்கம், அமணம்பாக்கம், மாகரல், கன்னிகாபுரம், சேத்துப்பாக்கம் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நெடுஞ்சாலையை ஒட்டி, அரசு பள்ளி நுழைவுவாயில்களின் முன்பு, கடந்த 5 வருடங்களுக்கு முன் நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது. அப்போது, கால்வாயின் மீது சிமென்ட் கான்கிரீட் சிலாப்பால் ஆன மூடிகள் பொருத்தப்பட்டன. கடந்த ஒரு வருடமாக அரசு பள்ளிகளின் முன்பு உள்பட பல்வேறு இடங்களில் சிமென்ட் சிலாப்புகளால் ஆன மூடிகள் ஆங்காங்கே சேதமாகி உடைந்திருப்பதால், தற்போது அப்பகுதிகளில் அதிகளவு ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு சென்றுவர மாணவ-மாணவிகள் அச்சப்படுகின்றனர்.
மேலும், அவ்வழியே இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளில் பலர், இந்த ராட்சத பள்ளங்களில் நிலைதடுமாறி விழுவதால் படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே, வெள்ளியூர் ஊராட்சியில் அரசு பள்ளிகளின் முன்பு சேதமடைந்து உள்ள மழைநீர் கால்வாய் மற்றும் அதன் மூடிகளை முழுமையாக சீரமைத்து, கோடை விடுமுறை முடிவதற்கு முன்பு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
