×

வெளியூரில் இருந்து சென்னை வரும் மக்களால் ஜிஎஸ்டி மற்றும் புறவழிச் சாலைகளில் வாகன நெரிசல்: ரயில்களில் வந்திறங்கிய பயணிகள்

 

சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கடந்த சில நாட்களுக்கு அரசு பேருந்து, கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மற்றும் ரயில், விமானங்களில் கிளம்பி சென்றனர். பின்னர், தங்களின் சொந்த ஊரில் வாக்களித்துவிட்டு, இன்று காலை வேலைக்கு செல்வதற்காக நேற்று மாலை முதல் நள்ளிரவை கடந்து இன்று காலை 10 மணி வரை சென்னைக்குத் திரும்ப, செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள்கோவில், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, தாம்பரம் ஜிஎஸ்டி சாலை வழியே ஏராளமான வாகனங்களில் படையெடுத்து வரத் துவங்கினர்.

இதனால் அப்பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை அதிகளவு வாகன நெரிசலுடன் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் வரையிலான மேம்பாலத்தில் அதிகளவு வாகனங்கள் நின்றிருந்தன. இதனால் தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக ஏராளமான மக்கள் வாகனங்களில் சென்னை நகருக்குள் அதிகளவு நுழைந்தனர். இதனால், வானகரத்தில் உள்ள வாகன சுங்கச்சாவடி பகுதியில் அதிகளவு வாகன நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதியை கடந்து செல்ல சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பிடித்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இதேபோல், சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பயணிகள் ரயில்களில் வந்திறங்கினர். பின்னர் அங்கிருந்து மின்சார ரயில்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விரைந்து சென்றனர். இதனால் பலர் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் ஜிஎஸ்டி சாலை, புறவழிச்சாலை மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளிடையே பரபரப்பு நிலவியது.

 

Tags : Chennai ,Bangalore ,Tamil Nadu ,
× RELATED காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!