×

தனுஷ் நடித்துள்ள ‘கர’ படத்துக்கு தடை கோரி வழக்கு

 

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கர’ படத்துக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் பூவாய் அம்மன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் வழக்கு; கர என்ற பெயரை மாற்றாமல் படத்தை வெளியிடக் கூடாது என மனுவில் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் கோரிக்கை விடுத்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பே ‘கரா’ என்ற தலைப்பில் படப்பெயரை பதிவு செய்துவிட்டோம் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Dhanush ,Chennai ,Vengai Ayyanar ,Salem Poovai Amman Film Production Company ,Kara ,
× RELATED எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின்...