×

அரியலூரில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

தா.பழூர், ஏப். 25: அரியலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் தேர்தெடுக்கப்பட உள்ளனர். அதற்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. வருகின்ற 1.5.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 7 மணி முதல் ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்லூரி வளாகத்தில் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்கு பெறலாம்.

16 வயதிற்கு உட்பட்ட அதற்கான வயது தகுதி 1.09.2010 தேதிக்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். 19 வயதுக்குட்பட்ட அதற்கான வீரர்கள் 1.09.2007 தேதிக்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் குணாளன் கைபேசி எண் 95006 10349, 9976999557 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டுக்கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர்.

 

Tags : Ariyalur ,Tha.Pazhur ,Ariyalur District Cricket Association ,
× RELATED கீழப்புலியூர் திருப்பதி கோவிலில்...