பெரம்பலூர்,ஏப்.22: பெரம்பலூர் மாவட்டத்தில் 2026-2027 ஆம் ஆண்டிற்கு, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளதை தகுதியுடையவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
