×

பெரம்பலூர் சிவன்கோயிலில் அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

பெரம்பலூர், ஏப். 25: பெரம்பலூர் சிவன்கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறையூர் சாலையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று (24ம்தேதி) சித்திரை மாதம் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தனி சன்னிதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதன்படி கால பைரவருக்கு காலை பால், தயிர், சந்தனம், மஞ்சள், பழச்சாறு வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

க்ஷஇதில் ஏராளமான பக்தர்களுக்கு கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், மற்றும் பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு பக்தியுடன் வணங்கி கால பைரவர் அருள் பெற்றனர். பூஜைகளை முல்லை சிவாச்சாரியார் செய்து வைத்தார். க்ஷநிகழ்ச்சி ஏற்பாடு செயல் அலுவலர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

 

Tags : Kalabhairava ,Perambalur Shiva Temple ,Ashtami ,Perambalur ,Chithirai ,Akhilandeswari ,Sametha ,Brahmapureeswarar Temple ,Thuraiyur Road ,Perambalur Municipality ,
× RELATED கீழப்புலியூர் திருப்பதி கோவிலில்...