×

வெயிலின் தாக்கத்தால் முதியவர்கள் கடும் அவதி

 

ஜெயங்கொண்டம், ஏப்.22: ஜெயங்கொண்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் முதியோர்கள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஜெயங்கொண்டத்தில் நேற்று வெயிலின் அளவு 98.6 ஃபாரன்ஹீட் அளவில் இருந்தது. சாலையில் காலணி இல்லாமல் நடக்க முடியாது. தரைக்கடை வியாபாரிகள் முதல் தள்ளுவண்டி தொழிலாளிகள், சைக்கிளில் வைத்து பூ மற்றும் காய்கறிகள் வியாபாரம் செய்பவர்கள் மருத்துவமனை செல்பவர்கள் உள்ளிட்ட பலரும் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.

Tags : Jayankondam ,
× RELATED கீழப்புலியூர் திருப்பதி கோவிலில்...