அபிஷேக் சர்மாவை துரத்தும் சாம்சன்

ஐதராபாத்: ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் குவித்து ஆரஞ்சு தொப்பியை பெறுவதற்கான பந்தயத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 323 ரன்களுடன் முதலிடத்திலும், ஹென்றிச் கிளாசன், 320 ரன்களுடன் 2ம் இடத்திலும் உள்ளனர்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தனது 2வது சதத்தை விளாசி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி தேடித்தந்த சஞ்சு சாம்சன், 293 ரன்களுடன் 3ம் இடம் பிடித்து அபிஷேக்கை நெருங்கி வருகிறார். குஜராத் டைடன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் 265 ரன்களுடன் 4ம் இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோஹ்லி, 247 ரன்களுடன் 5ம் இடத்திலும் உள்ளனர்.

Related Stories: