இடைப்பாடி, ஏப். 18: இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட பகுதியில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் விரளி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7521 முதல் ரூ.14859 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.9561 முதல் ரூ.12842 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரூ.14500 முதல் ரூ.35000 வரை ஏலம் போனது. இதில், 1100 மூட்டை மஞ்சள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் போனது. இதேபோல், 172 மூட்டை கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் கிலோ ரூ.140.60 பைசா முதல் ரூ.156.10 பைசா வரையும், 2ம் தரம் ரூ.115.10 பைசா முதல் ரூ.132.90 பைசா வரை ஏலம் போனது. இதில் மொத்தம் ரூ.10.77 லட்சத்திற்கு ஏலம் போனது. இன்று (சனிக்கிழமை) பருத்தி ஏலம் நடைபெறும் என கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மஞ்சள், கொப்பரை ரூ.1.20 கோடிக்கு ஏலம்
- எடப்பாடி
- திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்
- Konganapuram
- சேலம்
- நாமக்கல்
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
- ஈரோடு
