×

சட்டப்பேரவை தேர்தலுக்காக சென்னையில் இருந்து 6.27 லட்சம் பேர் பயணம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க சென்னையில் இருந்து இதுவரை 6.27 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக வாக்களிக்க பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக போக்குவரத்து துறை தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று காலை நிலவரப்படி வழக்கமாக இயக்கப்படும் 2,580 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன் கூடுதலாக 4,158 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

ஒட்டு மொத்தமாக 10,169 பேருந்துகள் இயக்கப்பட்டு 6.27 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர். மேலும், தேர்தல் தினமான நேற்றைய தினம் மதியம் வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக தொலைத்தூர பயணம் மேற்கொண்ட பலர் சரியான நேரத்திற்கு சொந்த ஊர்களுக்கு வழிவகை செய்யப்பட்டன. மேலும், விடுமுறைக்காக சென்றுள்ளவர்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற இடங்களுக்கு திரும்பி வருவதற்கான ஏற்பாடுகளையும் போக்குவரத்து துறை தரப்பில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,assembly ,Tamil Nadu assembly ,
× RELATED சென்னை புறநகர் வழித்தடத்தில் 2வது ஏசி...