×

அன்புமணி, ராமதாஸ் வழக்கை விசாரித்துவரும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு பணியிடமாற்றம்

சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி உள்பட மொத்தம் 98 மூத்த சிவில் நீதிபதிகள் பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் 98 சிவில் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் எஸ்.அல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில்,

சென்னை சிறு வழக்குகள் நீதிமன்ற நீதிபதி கே.ஜோதி தமிழ்நாடு மாநில ஜுடீசியல் அகாடமியின் துணை இயக்குனராகவும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் துணை செயலாளராக இருந்த எஸ்.சந்தானகுமார் சென்னை உயர் நீதிமன்ற சொத்து பராமரிப்பு அதிகாரியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை சிறு வழக்குகள் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.ஜெகதீசன், எஸ்.முத்து முருகன், எம்.பாக்கியம் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற மூத்த சிவில் நீதிபதிகள் கே.சிவசக்தி கண்ணன், கே.நம்பிராஜன், எல்.மகேஷ்வரி, எஸ்.பிரியா, ஆர்.உமா, கே.சுதா ராணி, எஸ்.லட்சுமி உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்து வரும் மூத்த சிவில் நீதிபதி எம்.தர்மபிரபு சிறு வழக்குகள் 3வது நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தவிர்த்து, செங்கல்பட்டு, விழுப்புரம், கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மூத்த சிவில் நீதிபதிகள் என மொத்தம் 98 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Dharmaprabhu ,Anbumani ,Ramadas ,Chennai ,M. K. ,Bamaka ,President ,Anhumani ,Tamil Nadu ,
× RELATED சென்னை புறநகர் வழித்தடத்தில் 2வது ஏசி...