×

அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ல் நடைபெற உள்ளது . மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராய நகர், வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது.

இன்று காலை முதல் வளாகத்தில் 450 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஆயுத படையினர் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் என நான்கு வகையான போலீஸ் பாதுகாப்பு சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வளாகம் முழுவதும் 210 சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், வேட்பாளர்களின் முகவர்களும் நிலைய கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி காவல் துறை உயர் அதிகாரிகளும் இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்டு வருகிறார்கள்.

Tags : Anna University ,Chennai ,Mylapore ,Saidapet ,Thyagaraya Nagar ,Velachery ,Virugambakkam… ,
× RELATED சென்னை புறநகர் வழித்தடத்தில் 2வது ஏசி...