×

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பதற்றம் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள முப்படைகளின் ஒருங்கிணைப்பு அவசியம்: கடற்படை தலைவர் திரிபாதி வலியுறுத்தல்

ஸ்ரீவிஜயபுரம்: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரிக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள முப்படைகளின் ஒருங்கிணைப்பு அவசியம் என இந்திய கடற்படை தலைவர் கே.திரிபாதி வலியுறுத்தி உள்ளார். இந்திய கடற்படை தலைவர் தினேஷ் கே.திரிபாதி இரண்டு நாள் பயணமாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் ராணுவ கட்டளைக்கு சென்றுள்ளார். அங்கு மூத்த அதிகாரிகளை சந்தித்த கே.திரிபாதி, நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாப்பதில் ராணுவத்தினரின் தொழில்முறை, அர்ப்பணிப்பு மற்றும் செயல்பாட்டு தயார் நிலைகளை பாராட்டினார்.

தொடர்ந்து அதிகாரிகளிடையே பேசிய தினேஷ் கே.திரிபாதி, “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள் மற்றும் பதற்றங்களை எதிர்கொள்ள, ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு மற்றும் இயங்குத்தன்மை மிகவும் அவசியம்” என வலியுறுத்தினார்.

Tags : Indo-Pacific region ,Navy ,Tripathi ,Srivijayapuram ,Indian Navy ,K. Tripathi ,Dinesh K. Tripathi ,Andaman ,Nicobar Islands ,
× RELATED 152 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல்...