×

ஓராண்டை கடந்தும் நீடிக்கும் நடவடிக்கை இந்திய வான்வௌியில் பாக். விமானங்கள் பறக்க மே 24 வரை தடை நீட்டிப்பு

புதுடெல்லி: இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடை அடுத்த மாதம் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடியாக ஒன்றிய அரசு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க கடந்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி முதல் தடை விதித்தது.

அதேபோல் பாகிஸ்தானும் கடந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி முதல் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்தது. இந்தியா விதித்த தடை பின்னர் கடந்தாண்டு மே 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மே 24ம் தேதி வரை பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags : New Delhi ,Pahalgam, Kashmir ,
× RELATED 152 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல்...