×

வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதல் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி 11 பேர் பலி

மிர்சாபூர்: உத்தர பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய இன்னொரு லாரி மற்றும் கார் மீது மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். உபி மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள திராமண்ட்கஞ்ச் என்ற இடத்தில் இருந்து லசோடாவை நோக்கி சரக்குகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்றது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற இன்னொரு லாரி மீது மோதியது. இந்த மோதலின் போது இரண்டு லாரிகளுக்கும் இடையேில் ஒரு கார் சிக்கியது.

இதைதொடர்ந்து நடந்த சம்பவங்களில் இன்னொரு கார் மீதும் வாகனங்கள் மோதி தீப்பிடித்தன. இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார், தீயணைப்பு படையினருக்கு உள்ளூர் மக்களும் உதவினர். மிர்சாபூர் மாவட்ட எஸ்பி அபர்ணா ரஜத் கவுசிக், இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இந்த விபத்தில் லாரிகளில் ஒன்று பீகார் மாநில பதிவு எண்ணையும் இன்னொன்று மத்திய பிரதேசத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இறந்தவர்களில் 9 பேர் உபியை சேர்ந்தவர்கள். 2 பேர் மபியை சேர்ந்தவர்கள். பலியானவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

Tags : Mirzapur ,Uttar Pradesh ,Drumandganj ,Mirzapur district ,UP ,Lasoda… ,
× RELATED 152 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல்...