×

பெங்காலி திரைத்துறையில் ஒற்றுமை இல்லை; அரசியலில் ‘பயம்’ என்பது ஆயுதமாக்கப்படுகிறது: பிரபல இயக்குநர் அரிந்தம் சில் கவலை

கொல்கத்தா: மேற்கு வங்கத் திரைப்படத்துறை மற்றும் அரசியல் சூழல் குறித்து பிரபல இயக்குநர் அரிந்தம் சில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு பள்ளிக்கூட மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து ‘தனஞ்சய்’ என்ற படத்தை மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த திரைப்பட இயக்குனர் அரிந்தம் சில் இயக்கினார். அதனைத் தொடர்ந்து, 30 ஆண்டுகளுக்கு முன்பு இடதுசாரி ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் கல்வி முறைகேடுகளை மையமாக வைத்து ‘கர்ப்பூர்’ என்ற படத்தை கடந்த மார்ச் மாதம் அவர் வெளியிட்டார்.

அரசியல் த்ரில்லர் வகைப்படமான இதில், திரிணமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் பிரத்யா பாசு மற்றும் குணால் கோஷ் ஆகியோரை நடிக்க வைத்தார். இப்படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் தேர்தல் காலத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. குறிப்பாகக் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் நடக்கும் ஊழல்களைச் சுட்டிக்காட்டிய இத்திரைப்படம், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘ஊழல் என்பது ஒரு நாட்டின் அமைப்பையே சிதைக்கும் கரையான் போன்றது; ஈரானிய இயக்குநர் ஜாபர் பனாஹி போன்ற துணிச்சல் நமது நாட்டுப் படைப்பாளிகளுக்குக் குறைவுதான்.

அரசியலில் பயம் என்பது முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. டிரம்ப் போன்ற தலைவர்கள் கூட அதையே கடைப்பிடிக்கின்றனர். பெங்காலி திரைப்படத்துறையில் எந்த காலத்திலும் ஒற்றுமையாக இருந்ததில்லை. கடந்த 1960ம் ஆண்டுகளில் கூட நடிகர்கள் பல்வேறு சங்கங்களாகப் பிரிந்தே இருந்தனர்; கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் இருந்து அரசியலைத் தள்ளியே வைக்க வேண்டும்; திரைப்படக் கலைஞர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

Tags : Chill ,Kolkata ,Arindam Chill ,West Bengal ,
× RELATED நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வருகிற...