×

சித்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

*ஏராளமானோர் பங்கேற்பு

சித்தூர் : சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஆசிரியர்கள் சங்க பி ஆர் டி யு சங்கம் சார்பில்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க மாநில பொதுச் செயலாளர் கிரி பிரசாத் தலைமையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் கூறியதாவது:

ஆந்திர மாநில முதல்வர் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது சந்திரபாபு நாயுடு, அரசு ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி அளித்தார்.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று அரசு பொறுப்பேற்றதிலிருந்து கொடுத்த வாக்குறுதியை முதல்வர் சந்திரபாபு நாயுடு நிறைவேற்றவில்லை.இதனை கண்டித்து ஆந்திர மாநிலம் அரசு ஆசிரியர்கள் சங்க பி.ஆர்.பி.யு. ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் 26 மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அரசு ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும். அதேபோல் அரசு ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். விடுப்பில் இருந்த நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். பிஎப் நிதியிலிருந்து கடன் வழங்க வேண்டும். கடந்த 2008ம் ஆண்டில் இருந்து 2015ம் ஆண்டு வரை பணிபுரியும் தற்காலிக அரசு ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மேலும், பணி உயர்வு அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப வழங்க வேண்டும். எங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் மாநிலம் முழுவதும் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் ஏராளமான அரசு ஆசிரியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Tags : Teachers' union ,Chittoor Collector ,Chittoor ,Government Teachers' Union ,PRDU Sangam ,District Collector ,Government… ,
× RELATED அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் அரசு...