×

பார்வையற்றோருக்கு புதிய வசதி வேட்பாளர்களை இணையதளம் மூலம் அறியலாம்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பார்வை மாற்றுத்திறனாளி மக்களின் வசதிக்காக, வேட்பாளர்களின் பட்டியல் (படிவம் 7ஏ), தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் எளிதாக அணுகும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை ஸ்கிரீன் ரீடர் அல்லது உரையில் இருந்து பேச்சாக மாற்றும் மென்பொருள் மூலம் எளிதாகக் கேட்டு தெரிந்துகொள்ளலாம். பார்வை மாற்றுத்திறனாளி மக்கள் தங்களது சட்டமன்ற தொகுதியின் பெயரை தட்டச்சு செய்து தேடுவதன் மூலம், வேட்பாளர்களின் விவரங்கள், கட்சி மற்றும் ஒதுக்கப்பட்ட சின்னம் ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம்.

இதற்கான இணையதள முகவரி: https://erolls.tn.gov.in/acwithcandidate_tnla2026/AC_List.aspx மூலம் உங்கள் தொகுதி வேட்பாளர்களை பற்றி தெரிந்துகொள்ளலாம். அதேபோல், அனைத்து பொதுமக்களும் தங்கள் சட்டமன்ற தொகுதி மற்றும் அதில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை அறிந்துகொள்ள ஏதுவாக, சட்டமன்ற தொகுதி வரைபடம், வாக்காளர் விவரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான அலுவலர்களின் தொடர்பு எண்களை https://erolls.tn.gov.in/acwithcandidate_tnla2026/ என்ற இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chennai ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Archana Patnaik ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்...