×

3 நாள் தொடர் விடுமுறை டாஸ்மாக் கடைகளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை

 

சென்னை: தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதியும் அதற்கு முன்பாக இரண்டு நாட்கள் 21, 22ம் தேதி என தொடர்ந்து 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதியும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடை மூடப்படுவதால், நேற்று முன்தினமே மது பிரியர்கள் மூன்று நாட்களுக்கும் சேர்த்து மதுபாட்டில்களை வாங்கி வைத்துள்ளனர். இதனால் நேற்று முன்தினம் மட்டுமே ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

Tags : Tasmac shops ,Chennai ,Tasmac ,
× RELATED வேலூரில் 107 டிகிரி வெயில்