×

வெயிலுக்கு முன்னாடி வாக்குச்சாவடிக்கு போங்க.. எடப்பாடி வேண்டுகோள்

 

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்குப்பதிவு நாளன்று வெயிலுக்கு முன்னரே வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குகளை பதிவு செய்திட வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு வாக்காள பெருமக்கள், குறிப்பாக பெண்கள், முதியவர்கள் வாக்களிக்க உதவும் வகையில் நம்முடைய வழக்கமான பணிகள் திறம்பட நடைபெற்றிட வேண்டும்.

எப்பொழுதும் துணிந்து நின்று பணியாற்றிட வேண்டும். உங்களுக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன். அடுத்த 48 மணி நேரம் நமக்கு மிக, மிக முக்கியமான காலகட்டம். அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவு, பகல் பாராமல் களப் பணியாற்றி, `எனக்கு பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்’ என்று சூளுரைத்த நம் அன்புத் தாயின் சபதத்தை நிறைவேற்றிக் காட்டுவோம்.

நாளை நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி வேட்பாளர்களுக்கு அவர்களுக்கு உரிய சின்னத்திலும், வாக்குகளை அளித்து, வெற்றிபெறச் செய்து, புதிய வரலாற்று சாதனையை படைத்திட வேண்டும் என்று இருகரம் கூப்பி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Edappadi ,Chennai ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,
× RELATED வேலூரில் 107 டிகிரி வெயில்