- காரைக்கல் காரைக்கல்
- சுசை நாதன்
- எல்ஜிஆர்
- குரும்பகரம் கொட்டப்பாக்கம்
- நெடுங்காடு
- காரைக்கால் மாவட்டம்
- சம்மனசு மேரி
*காரைக்காலில் பரபரப்பு
காரைக்கால் : காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் உள்ள குரும்பகரம் கொட்டப்பாக்கம் பகுதியில் எல்.ஜி.ஆர் பகுதியை சேர்ந்தவர் சூசைநாதன் (90). இவரது மனைவி சம்மனசு மேரி(85). இவர்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு அதே பகுதியில் பட்டா இடம் ஒன்று வாங்கி அதில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் இறந்த நிலையில் அவரது மகன் ஜிஸூ ஆண்டனி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தாத்தா பாட்டி உடன் வந்து வாடகை வீடு கிடைக்கும் வரை தங்களிடம் தங்கிக் கொள்கிறோம் என்று தஞ்சமடைந்துள்ளார்.
பின்னர் நாளடைவில் பேரன் ஜிஸூ ஆண்டனி வீடு தனக்கு சொந்தம் என்று தனது தாத்தா பாட்டியை அவ்வபோது அடித்து விரட்டி உள்ளார். இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில் கடந்த வாரம் முதியவர்களை பலமாக தாக்கி வீட்டை விட்டு விரட்டியுள்ளார்.பின்னர் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் மாவட்ட எஸ் எஸ் பி லட்சுமி சௌஜன்யாவிடம் முதியோர் தம்பதிகள் புகார் கொடுக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டார். மேலும் முதியவர்கள் நெடுங்காடு காவல் நிலையத்தில் வரவழைக்கப்பட்டபோது, முதியோர்களிடம் அந்த வீட்டை எழுதி கேட்டு கட்டப்பஞ்சாயத்து செய்து டார்ச்சர் செய்து உள்ளார்கள். இதனை அடுத்து மீண்டும் வயதான தம்பதியினர் காரைக்கால் தாலுகா அலுவலகத்தில் நேற்று தஞ்சமடைந்தனர்.
தங்கள் வீட்டை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் வேதனை உடன் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து வயதான தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தற்போது புகார் கொடுத்துள்ளனர். காவல்துறை உரிய விசாரணை செய்து முதியவர்களுக்கு அவர்களுக்கு சொந்த வீட்டை மீட்டு தர வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.
