ஐஎஸ்எல் கால்பந்து முகம்மதன் அணியுடன் சென்னையின் மோதல்

 

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்று சென்னையின் எப்சி – முகம்மதன் எப்சி அணிகள் களம் காணவுள்ளன. ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று நடக்கும் போட்டியில் சென்னையின் எப்சி – முகம்மதன் எப்சி அணிகள் மோதவுள்ளன.

சென்னை அணி, இதுவரை 8 போட்டிகளில் ஆடி 2ல் வென்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 10ம் இடத்தில் உள்ளது. முகம்மதன் அணி, 8 போட்டிகளில் ஆடி 7ல் தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி ஒரு போட்டியில் டிரா செய்து 1 புள்ளி மட்டுமே பெற்று பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இன்றைய போட்டியில் 3வது வெற்றியை பெற சென்னை வீரர்கள் தீவிர முனைப்பு காட்டுவர் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: