×

அரசு பஸ் டிரைவர் மீது சரமாரி தாக்குதல் மாமியார், மைத்துனர்களுக்கு போலீஸ் வலை

 

வந்தவாசி, ஏப். 20: வந்தவாசி அடுத்த நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(43) வந்தவாசி அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்பொழுது தனது மனைவி கோடீஸ்வரியுடன் சென்னையில் வசித்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக மனைவியுடன் கோபித்துக் கொண்டு தனது சொந்த கிராமமான நெற்குணம் கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு தனது தாய் அலமேல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோடீஸ்வரியின் சித்தி தெள்ளாரை சேர்ந்த லட்சுமி இவரது மகன்கள் லோகநாதன், கோபால்சாமி ஆகியோர் சேகர் வீட்டிற்கு சென்று அப்போது ஏன் எனது மகளிடம் சண்டை போட்டு வந்து உள்ளீர்கள் என லட்சுமி கேட்டுள்ளார்.

Tags : Vandavasi ,Shekhar ,Nelkunam ,Vandavasi government ,Chennai ,Koteeswari ,
× RELATED மர்ம நபர்கள் வைத்த தீயால் எரிந்த பனை...