ஓமலூர் காய்கறி சந்தையில் விவசாயிகளுக்கு கண் சிகிச்சை முகாம்

ஓமலூர், பிப்.23: ஓமலூர் பஸ் ஸ்டாண்டையொட்டி செயல்படும் தினசரி காய்கறி சந்தையில், விவசாயிகளுக்கான கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமை ஓமலூர் முன்னாள் எம்எல்ஏ தமிழரசு, முன்னாள் கவுன்சிலர் குட்டி ஏகாம்பரம் துவக்கி வைத்தனர். இதில், கண் பரிசோதனை, நீரழுத்த பரிசோதனை, கண் புரை, மாலைக்கண் நோய், கண்களில் நீர் வடிதல், ஒற்றை தலைவலி, கிட்ட பார்வை, தூரப்பார்வை பரிசோதனைகள் செய்து, ஆலோசனை வழங்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேருக்கு, இலவச அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள், ஓமலூர் வட்டார காய்கறி வியாபாரிகள் நலசங்கம் சார்பில் செய்யப்பட்டது.

Related Stories:

>