×

திருப்பூரில் மனித சங்கிலி அமைத்து வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

திருப்பூர், ஏப்.16: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் சார்பில் கல்லூரி சாலையில் நேற்று மனித சங்கிலி அமைத்து வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாட்டு நலப்பணி திட்ட அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி உதவி ஆணையர் குமரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், ‘‘உங்கள் வாக்கு உங்கள் உரிமை.

வருகிற ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாளன்று வாக்குரிமை உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். உங்கள் உரிமையை யாருக்கும் விற்காதீர்கள். ஜனநாயக உரிமையை யாருக்கும் விட்டுக்கொடுக்காதீர்கள்’’ என்று கூறினார். பிறகு மாணவ, மாணவிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி மனித சங்கிலி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

 

Tags : Tiruppur ,Tiruppur Chikanna Government Arts College National Welfare Project Unit ,Tiruppur South Legislative Assembly Constituency Election Office ,National Welfare ,
× RELATED கான்கிரீட் கால்வாயாக மாறும் அமராவதி...