- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- திருமலா
- ஆந்திரப் பிரதேசம்
- தெலுங்கானா
- கர்நாடக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரளா
- சிவன்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விரைவில் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதனால் திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கும் வகையில் கோடை காலத்தில் விஐபி தரிசனங்களை ரத்து செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 80,000 பேர் தரிசனம் செய்ய முடியும் என தேவஸ்தானம் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
