- பாஜக
- திரிணாமூல் காங்கிரஸ்
- மேற்கு வங்கம்
- மத்திய அமைச்சர்
- அமித் ஷா
- கொல்கத்தா
- மேற்கு வங்க சட்டமன்றம்
- அமித்...
கொல்கத்தா: “மேற்குவங்க மக்களிமிருந்து திரிணாமுல் காங்கிரஸ் திருடிய ஒவ்வொரு பைசாவையும் பாஜ மீட்கும்” என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார். மேற்குவங்க பேரவை தேர்தலையொட்டி, வடக்கு மாவட்டமான ஜல்பைகுரியில் உள்ள ராஜ்கஞ்சில் நடந்த பாஜ பிரசார பேரணியில் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அமித் ஷா, “இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி ஆட்சியில் இருந்து வௌியேறுவது நிச்சயம் என்றாலும், அது மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் இருந்து தொடங்கும்.
குஜராத்தை மோடி 12 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இப்போது ஒன்றியத்தில் 12 ஆண்டுகள் ஆட்சி செய்கிறார். மாநிலத்திலும், ஒன்றியத்திலும் 24 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் மோடி மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. ஆனால் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இங்குள்ள வாக்காளர்கள் பாஜவுக்கு வாக்களியுங்கள்.
பாஜ ஆட்சிக்கு வந்ததும், ஆசிரியர் பணி நியமனத்தில் திட்டமிட்டு ரூ.300 கோடி கொள்ளையடித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் வடக்கு வங்கத்துக்கு ஒன்றிய அரசு அளித்த வௌ்ள நிவாரண நிதியில் இருந்து திருடப்பட்ட ரூ.100 கோடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மக்களிடமிருந்து கொள்ளையடித்த ஒவ்வொரு பைசாவையும் பாஜ வட்டியுடன் மீட்டு தரும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தாமரை சின்னத்தை தேடி அழுத்துங்கள். நாங்கள் ஆட்சி அமைத்து திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களை தேடி பிடித்து நீதியின் முன் நிறுத்துவோம்” என்று உறுதியுடன் கூறினார்.
