திருமலை: ஒன்றிய அரசின் புதிய மசோதாக்களுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி வரையறை மசோதா தொடர்பாக ஒன்றிய அரசு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை கூட்டியுள்ளது.
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் தனது நிலைப்பாட்டை நேற்றிரவு அறிவித்தார். அதில், ஒன்றிய அரசின் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி வரையறை மசோதாக்களுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முழு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.
