×

தான் திருடி பிறரை நம்ப மாட்டார்கள் பழமொழி தான் திருடி பிறர் மீது பழிபோட தயங்கமாட்டான் ஆதவ் அர்ஜுனா புதுமொழி: திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் கடும் தாக்கு

சென்னை: தான் திருடி பிறரை நம்பமாட்டார்கள் பழமொழி, தான் திருடி பிறர் மீது பழிபோட தயங்கமாட்டான் ஆதவ் அர்ஜுனா என்பது புதுமொழி என்று திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் குற்றம்சாட்டினார். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தொகுதி வேட்பாளர் ராஜேஸ்வரியை ஆதரித்து 50, 60 இடங்களில் தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் தேர்தல் பரப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது: ஜனநாயகன் படத்தை தானே வெளியிட்டு அனுதாபம் தேடும் விஜய்க்கும், ஆதவ்விற்கும் எதற்கெடுத்தாலும் தி.மு.க.வா? தன்னை நம்பி தொடர்ந்து வந்த ரசிகர்களின் உயிரை காப்பாற்ற முடியாத விஜய், பெற்ற தாய், தகப்பனை காப்பாற்ற முடியாத விஜய், தாலி கட்டிய மனைவியை காப்பாற்ற முடியாத விஜய், இன்று தன்னை நம்பி முதல் போட்ட தயாரிப்பாளரையும் காப்பாற்ற முடியாமல் தவிக்க விட்ட விஜய் இந்த நாட்டைக் காப்பாற்ற போகிறாராம். பழிபோட தலை தேடுகிறார்.

இந்த நிலை நீடித்தால் சென்சார் போர்டே தேவை இருக்காது. இது சமூக குற்றம், குஷ்டரோகி கையில் இருக்கும் வெண்ணெய்க்கு சமமான திருட்டு லாட்டரி மருமகனாம் ஆதவ் அர்ஜூனாவை கையில் வைத்துக் கொண்டு, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காண்பித்து படம் எடுத்து பாஜவின் ‘பி’ டீமாக செயல்படுகிறார். சென்சார், தயாரிப்பாளர், டைரக்டர், கதாநாயகனிடம் இருக்கும் படம் எப்படி வெளியானது? தயாரிப்பாளிடமிருந்து கண்டிப்பாக படம் திருட்டு வெளியீடு நடக்காது.

ஒன்று சென்சார் போர்டை அல்லது ஒன்றிய பா.ஜ. அரசை கண்டித்து விஜய் பேச வேண்டும் அல்லது ஆதவ் அர்ஜுனாவை த.வெ.கவிலிருந்து நீக்கி இருக்க வேண்டும். தான் திருடி பிறரை நம்பமாட்டார்கள் பழமொழி, தான் திருடி பிறர் மீது பழிபோட தயங்கமாட்டான் ஆதவ் அர்ஜுனா என்பது புதுமொழி. காங்கிரஸ் மீது அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் விஜய்யின் த.வெ.க. காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதியிலிருந்தும் விலகி கொள்ளுமா?. முதல்வர் ஸ்டாலினை நெருங்குகிறவர்கள் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்து போகிறார்கள்.

யானைக் கூட்டம் அமைதியாக கூடி கலைகிறது. சிறிய கூட்டம் தான் என்றாலும் பூனை கூட்டம் அடிபட்டு சாகிறது.  தவெகவின் 233 வேட்பாளர்களில் 106 பேர் கட்சி தாவி போனவர்கள், ஆதலால் தான் த.வெ.க. என்றால் தாவி வெளியேறியவர்கள் கட்சி என்று அழைக்கிறார்கள். த.வெ.க. என்பது நாம் தமிழர் கட்சி போல் ஒரே ஒரு உறுப்பினர் கூட வெல்லமுடியாத கட்சி.

கேப்டன் களமிறங்கும்போது முதல் தேர்தலில் ஒரு சீட் வென்றார். ஜானகி அணியில் ஒரே ஒரு பி.எச்.பாண்டியன் வென்றார். ஆனால் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட த.வெ.க.வுக்கு கிடைக்காது. பல ஆண்டுகளாய் ஆலமரமும், மாதக்கணக்கில் வெற்றிலையும் வாழும் த.வெ.க. ஒரே நாளில் முடியும் ஈசலைப்போல், கிளிஞ்சல்கள் போல இந்த தேர்தலோடு மறையும். இவ்வாறு காசிமுத்துமாணிக்கம் பேசினார்.

Tags : DMK Business Team ,Kasi Muthumanickam ,Chennai ,Vellore district ,K.V.Kuppam ,Rajeswari… ,
× RELATED பகுதி நேர அடிப்படையில் பணியாற்றிய...