×

எடப்பாடி, கனிமொழி வாகனத்தில் சோதனை

மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேனி, மதுரை மாவட்டங்களில் நேற்று வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று மாலை தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் பிரசாரத்தை முடித்து விட்டு, வேனில் வந்து கொண்டிருந்தார். உசிலம்பட்டி அருகே வேன் வரும்போது, வழியில் கணவாமலை என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அவரது வாகனத்தை மறைத்து நிறுத்தி வேனுக்குள் சோதனையிட்டனர்.

ஏதும் பொருட்கள் சிக்கவில்லை. இதேபோல், நேற்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூர் பேருந்து நிலையம் முன்பு பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கனிமொழி வாக்கு சேகரித்து பேசினார். பிரசாரத்தை முடித்துவிட்டு புதூர்- அருப்புக்கோட்டை வழியாக செல்லும்போது சென்னம்பட்டி ஊராட்சி அருகே சாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கனிமொழி வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர்.

Tags : Edappadi ,Kanimozhi ,Madurai ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Theni ,Andipatti, Theni district ,Usilampatti ,
× RELATED பகுதி நேர அடிப்படையில் பணியாற்றிய...