×

சென்னையில் ரூ.56.50 லட்சம் பறிமுதல்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதனடிப்படையில் நேற்று பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையின்போது பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.1,39,500, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியில் ரூ.66,000, அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில் ரூ.99,500, மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையின்போது, திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதியில் ரூ.62,000 என மொத்தம் ரூ.3,67,000 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே காவல் படையினர் சோதனையின் போது, துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் ரூ.7,50,000 ரொக்க பணமும், 289 கிராம் தங்கம் சுமார் ரூ.44,83,257 மற்றும் 1000 கிராம் போதைப் பொருள் மதிப்பு ரூ.50,000 என மொத்தம் ரூ.52,83,257 மதிப்பிலான ரொக்கப் பணம், தங்கம் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu Assembly general ,Election Flying Squad ,Flying Squad ,Perambur ,
× RELATED பகுதி நேர அடிப்படையில் பணியாற்றிய...