×

மன்சூர் அலிகான் திடீர் அட்மிட் பிரசாரம் ரத்து

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகரும், சமூக ஆர்வலருமான மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி திருச்சி மாவட்டத்தில் லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் லால்குடி தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இதனையடுத்து அவர், லால்குடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

தொண்டையில் வலி ஏற்பட்டு பேச முடியாமல் கடும் அவதிப்பட்டார். இதையடுத்து அவரது உதவியாளர்கள், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மன்சூர் அலிகானை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1ம்தேதி கல்லக்குடி தண்டவாளத்தில் தலை வைத்து நூதன பிரசாரத்தில் ஈடுபட்டதாக மன்சூர் அலிகான் மீது ரயில்வே போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Mansoor Ali Khan ,Indian Democratic Tigers Party ,Tamil Nadu Assembly ,Trichy district ,Lalgudi ,Trichy East ,Thiruverumpur ,Manapparai ,
× RELATED பகுதி நேர அடிப்படையில் பணியாற்றிய...