×

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் நுங்கு, மண்பானை விற்பனை அமோகம்

அரியலூர், ஏப்.13: கோடை வெயிலை முன்னிட்டு குளிர்ந்த நீர் பருகுவதற்காக மண்பானை விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. வெயிலின் தாக்கம் மற்றும் அனல் காற்றால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் வெளியே வராமல் வீட் டிலிலேயே முடங்கியுள்ளனர். இதனால் நகர வீதிகள் மட்டுமின்றி புறநகர் பகுதிளிலும் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. தற்போது வெயின் தாக்கத்தால் முக்கிய சுற்றுலா தலமாக விளங் கும் அழகர்ககோயில் சாலைகள், மீனாட்சியம் மன் கோயில் மற்றும் முக் கிய சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி சாலை வெறிச்சோடி காணப்படு கிறது.

பனை நுங்கு சீசன் துவக்கம்
சீசன் தொடக்கம் பொதுவாக கோடைகாலம் வந்தாலே மக்கள் குளிர்ச்சியான உணவுகளை விரும்பி வாங்கி சாப்பிடுவது வழக்கம்.அதன்படி திருப்பட்டினம்,திருநள்ளாறு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனை மரங்களை விவசாயிகள் சாலை ஓரங்களிலும்,சாகுபடி நில பகுதியின் கரைகளிலும், சிற்றோடை கரைகளிலும் சாகுபடி செய்துள்ளனர்.

ஆண்டுக்கு ஒருமுறை பலன் தரும் பனைமரத்தில் பதநீர் பனை நுங்கு சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் முடிய இருக்கும் ஒரு நுங்கு கண் ரூ.10க்கு விற்கப்படுகிறது. தற்போது, வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில் ஆங்காங்கே பனை நுங்கு விற்பனை சூடு பிடித்து வருகிறது. இதே போல் இளநீர், தர்பூசணி,பழச்சாறு விற்பனைகளும் சூடுபிடித்துள்ளது. மக்கள் தாகத்தை தணிக்க கூழ்கடைகள்,குளிர்பான கடைகளில் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

 

Tags : Ariyalur ,
× RELATED பெரம்பலூர், குன்னம் தொகுதியில் உள்ள 732...