ஜெயங்கொண்டம், ஏப். 13: செந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொய்யாதநல்லூர் அருகே
மாநில நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் (வாகனம் ஓட்டுநர் உரிமம் இல்லாமல்) தனது அத்தையை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனத்தை ஓட்டி வந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரின் அத்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து செந்துறை காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த விபத்தில் இருவருமே தலைக்கவசம் அணியவில்லை அணிந்திருந்தால் பெரும் விபத்தை தவிர்த்து இருக்கலாம்.வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
