×

சட்டமன்ற தேர்தல் பணியில் காவலர்கள் பொறுப்புணர்வோடு பணியாற்ற வேண்டும்

பெரம்பலூர்,ஏப்.12: ஒவ்வொரு காவலரும் பொறுப்புணர்வோடு பணியாற்ற வேண்டும், உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்துப் பயிற்சியில் எஸ்பி பிரபாகர் அறிரை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் தலைமையில் நேற்று பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது.

இதில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, கவாத்துப் பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும் வருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளில் காவலர்கள் சிறப்பாக பணிபுரிவது குறித்தும் மாவட்ட எஸ்பி பிரபாகர் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி பேசும்போது, காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு காவலரும் பொறுப்புணர்வோடு பணியாற்ற வேண்டும், உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மேலும் காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்து அதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறினார். இந்த கவாத்து பயிற்சியில் பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி துணை ரவிச்சந்திரன், ஆயுதப்படை டிஎஸ்பி சுப்பையன், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர், சப்.இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Perambalur ,SP Prabhakar ,Perambalur District Armed Forces Ground ,Perambalur District ,
× RELATED பெரம்பலூர், குன்னம் தொகுதியில் உள்ள 732...