×

ஜெயங்கொண்டத்தில் சிவனடியார்களுக்கு திருமுறை பயிற்சி வகுப்பு

ஜெயங்கொண்டம், ஏப்.12:அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சிவனடியார்களுக்கு திருமுறை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருக்கயிலாய பரம்பரை அருமை ஆதீனம் 26 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் ஆசியுடன் ஜெயங்கொண்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை தோறும் அகத்தியர் தேவாங்க தேவார திருவருட்பாடல் மற்றும் உரையுடன் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு சரவணன் தலைமை வகித்தார். அருள்மொழி சீனிவாசன் முன்னிலை வகித்தார். வீரமணி மற்றும் ஓதுவார் மூர்த்திகள் பயிற்சி வகுப்பினை நடத்தினர்.சிவனடியார்கள் அனைவரும் தேவாரத்தை முறைப்படி பயின்று வரும் வகையில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Shiva ,Jayankondam ,Jayankondam, Ariyalur district ,Guru Maha Sannidhanam ,Thirukkailaya Paramparai Arumai Aadeenam ,Srilasree Shanmuga ,Desika ,Gnanasambandhar ,Paramacharya ,Swami ,
× RELATED பெரம்பலூர், குன்னம் தொகுதியில் உள்ள 732...