- நட்டர்மங்கலம் மாரியம்மன்
- கோவில்
- பால்குடம் திருவிழா
- Patalur
- மாரியம்மன்
- நாட்டார்மங்கலம்
- ஆலதூர் தாலுக்கா
- பெரம்பலூர் மாவட்டம்
- தமிழ்
- சித்திராய்
- சுவாமி வீடியுலா
பாடாலூர், ஏப். 13: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் நாளான தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு பால்குடம் எடுத்தல், சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு தமிழ் வருட பிறப்பான நாளை காலை 10 மணியளவில் பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்வையொட்டி மாரியம்மன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. இரவு 10 மணியளவில் மாவிளக்கு பூஜை மற்றும் குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
