சிட்னி: ஆஸ்திரேலியன் சாம்பியன்ஷிப் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 18 வயது இளம் வீரர் கவுட் கவுட், புதிய உலக சாதனை படைத்துள்ளார். கடந்த 2009ல், ஜெர்மனியில் நடந்த 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய ஜாம்பவான் உசேன் போல்ட் 19.93 நொடிகளில் போட்டி தூரத்தை கடந்து உலக சாதனை படைத்திருந்தார்.
அப்போது அவரது வயது, 23. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஸ்திரேலியன் சாம்பியன்ஷிப் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில், அந்நாட்டை சேர்ந்த 18 வயது இளைஞர் கவுட் கவுட், போட்டி தூரத்தை 19.67 நொடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். 200 மீட்டர் தூரத்தை 20 நொடிக்குள் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் கவுட் பெற்றுள்ளார்.
