சூறைக்காற்றுடன் கனமழை; வாழை, கரும்பு பயிர் சேதம்

இடைப்பாடி, பிப்.21: சேலம் மாவட்டத்தில் கோடை தொடங்கும் முன்பாக கடும் வெயில் வாட்டியெடுக்கிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது கருமேகங்கள் திரண்டு வந்தது. ஆனால் மழை பெய்யாமல் ஏமாற்றியது. நேற்று அதிகாலை முதலே, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்தது. பூலாம்பட்டி, வெள்ளரிவெள்ளி, சித்தூர்,  கொங்கணாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன்  காணப்பட்டது. மாலை 5 மணியளவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.  கள்ளுகடை பகுதியில் சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் மற்றும் கரும்பு  சாய்ந்தது. பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கியது. இடைப்பாடி  நகராட்சி பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி தண்ணீர், சாலையில்  மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால், பூமி குளிர்ந்தது  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கெங்கவல்லியில் திடீர் மழை: கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதியில் நேற்று அதிகாலை கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த சாரல் மழையால், வயல்களில் மழைநீர்  தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: