×

காஞ்சிபுரம் மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளில் 65 வேட்பாளர்கள் போட்டி

காஞ்சிபுரம், ஏப்.11: சட்டமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் தொகுதியில் 40 பேரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 19 பேரும், உத்திரமேரூர் தொகுதியில் 35 பேரும், காஞ்சிபுரம் தொகுதியில் 31 பேரும் என அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 125 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் ஆலந்தூரில் 40 வேட்பாளர்களில் 16 பேர் நிராகரிக்கப்பட்டு 24 வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், ஸ்ரீபெரும்புதூரில் 19 வேட்பாளர்களில் 3 பேர் நிராகரிக்கப்பட்டு, 16 வேட்பாளர்களும், உத்திரமேரூரில் 35 வேட்பாளர்களில் 17 பேர் நிராகரிக்கப்பட்டு 18 வேட்பாளர்களும், காஞ்சிபுரத்தில் 31 வேட்பாளர்களில் 14 பேர் நிராகரிக்கப்பட்டு 17 வேட்பாளர்களும் போட்டியிட வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி ஆகி இருந்தது. நேற்று முன்தினம் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு, இறுதியாக ஆலந்தூர் தொகுதியில் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல, ஸ்ரீபெரும்புதூரில் 13 பேரும், உத்திரமேரூரில் 14 பேரும், காஞ்சிபுரத்தில் 15 பேரும் என மொத்தம் 65 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

Tags : Kanchipuram district ,Kanchipuram ,Alandur constituency ,Sriperumbudur constituency ,Uthiramerur constituency ,Kanchipuram constituency ,AIADMK ,DMK ,PMK ,Congress ,Thaweka ,Naam… ,
× RELATED பெரும்புதூர் பகுதியில் கள்ள சந்தையில் சிலிண்டர் விற்பனை அதிகரிப்பு