×

பெரும்புதூர் பகுதியில் கள்ள சந்தையில் சிலிண்டர் விற்பனை அதிகரிப்பு

பெரும்புதூர், ஏப்.14: பெரும்புதூர் பகுதியில் கள்ள சந்தையில் சமையல் காஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் பதற்றம் காரணமாக, ஏற்கனவே இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது சிலிண்டர் விற்பனை ஏஜென்சிகள் அதிக லாபத்திற்கு உணவகங்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளாது.பெரும்புதூர் தாலுகாவில் ஏராளமான பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. வெளி மாவட்ட, மாநிலம் மட்டுமல்லாமல், வெளி நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கி உள்ளனர். இவர்களை நம்பி, பெரும்புதூர் பகுதியில் சிறிய மற்றும் பெரிய அளவிலான ஓட்டல்கள், டீ கடைகள் இயங்கி வருகின்றன.

தற்போது போர் பதற்றத்தால், வணிக சிலிண்டர்கள் கடும் தட்டுபாடு நிலவி வருகிறது. இதனால், சில சிலிண்டர் ஏஜென்சிகள், வீட்டு உபயோக சிலிண்டர்களை ஓட்டல்களுக்கும், டீ கடை, இறைச்சி கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் வரையில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், வாடிக்கையாளர் பதிவு செய்த சிலிண்டர்களை டெலிவரி செய்ததாக எம்.எம்.எஸ் வருவதாகவும், ஆனால் சிலிண்டர் வழங்குவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளானர்.
இதுகுறித்து ஏஜென்சிகளிடம் கேட்டால், மீண்டும் முன்பதிவு செய்யுங்கள், உங்களுக்கு சிலிண்டர் கொடுக்கப்படும் என்கின்றனர். ஆனால், ஒரு சிலிண்டர் பெறப்பட்ட நாளில் இருந்து 28 நாட்கள் கழித்துதான் அடுத்த சிலிண்டருக்கு முன்பதிவு செய்ய முடிகிறது. இதனால், நாளுக்கு நாள் குடியிருப்பு வாசிகளின் நிலை மோசமாகி வருகிறது. வல்லம், இருங்காட்டுகோட்டை, ஒரகடம், படப்பை, சுங்குவார்சத்திரம், மாம்பாக்கம், தண்டலம், காட்டரம்பாக்கம் உள்ளிட்ட தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் வடமாநில ஊழியர்கள் தங்கி வேலை செய்கின்றனர்.

இவர்களின் அன்றாட சமையலுக்கு சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. இதனை பயன்படுத்தி அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாவது சிலிண்டர் பெற தயாராக இருப்பதை அறிந்த ஏஜென்சிகளில் வேலை செய்யும் ஊழியர்கள் அதிகபடியான விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தினமும் சிலிண்டர் ஏஜென்சி அலுவலகத்தில் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருசில ஏஜென்சிகளின் ஊழியர்கள் ஒருபக்கம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும், நேரடியாக ஏஜென்சி உரிமையாளர்கள் வணிக நிருவனங்களுக்கு விற்பனை செய்தும் வருகின்றனர்.

இதில் வல்லம் கிராமத்தை சேர்ந்த சத்தார்கான் என்பவர் போன் மூலம் சிலிண்டர் புக் செய்துள்ளார். அவருக்கு சிலிண்டர் விநியோகம் செய்யபட்டுள்ளதாக எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. ஆனால், அவருக்கு சிலிண்டர் சப்ளை செய்யபடவில்லை. அவர், நேரடியாக சிலிண்டர் ஏஜென்சிக்கு சென்று முறையிட்டுள்ளார். அதற்கு, ஏஜென்சி நிர்வாகம், எங்கு தவறு நடந்துள்ளது என்று தெரியவில்லை, மீண்டும் முன்பதிவு செய்யுங்கள் என்று கூறி அனுப்பி உள்ளனர்.
இதே நிலைதான் பெரும்புதூர் ஒன்றியம் முழுவதும் நடைபெறுகிறது. எனவே கள்ள சந்தையில் சிலிண்டர்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரும்புதூர் பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Perambudur ,US ,Israel ,Iran ,India ,
× RELATED உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி திமுக...