- திமுக
- கே. சுந்தர்
- உத்திரமேரூர்
- மதுராந்தகம்
- மாடல் ஊராட்சி
- காஞ்சிபுரம்
- மதச்சார்பற்ற முன்னேற்ற கூட்டணி
- காஞ்சிபுரம் தெற்கு…
மதுராந்தகம், ஏப்.13: உத்திரமேரூரில் பேரூராட்சி பகுதியில் திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களை கூறி திமுக வேட்பாளர் க.சுந்தர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளரும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தர் உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியில் உள்ள பருத்தி கொள்ளை, ஏபி சத்திரம், நல்லூர், பட்டன்சேரி, மேட்டு காலனி, குப்பையன் நல்லூர், நீரடி, காக்கநல்லூர், மல்லிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது வேட்பாளர் சுந்தருக்கு பட்டாசு வெடித்து மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, திராவிட மாடல் அரசின் கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்களுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், காலை உணவு திட்டம், கோவிட் நிவாரண உதவித் தொகை, தமிழ் புதல்வன், கலைஞர் காப்பீடு, வீட்டுமனை பட்டாக்கள், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, மீனவர்களுக்கான நலத்திட்டங்கள், மினி ஸ்டேடியம், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வணிகர்களிடம் வழங்கினார். அப்போது க.சுந்தர் பேசுகையில், 2.0 திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 பெற்று தருவேன், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்பாடுபடுவேன் என்றும், பல்வேறு சாதனைகளை எடுத்துச்சொல்லியும் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார்.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர் செல்வம் எம்.பி, நீரடி கிராமத்தில் வேட்பாளர் சுந்தரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் ஒன்றியக்குழு உறுப்பினர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி தலைவர் சசிகுமார், துணைத் தலைவர் இளமதி கோவிந்தராஜ், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் எழிலரசன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
