×

மாணவன் ஓட்டிச்சென்ற கார் கவிழ்ந்து விபத்து

தாம்பரம், ஏப்.8: மணலி பகுதியை சேர்ந்தவர் மித்லேஷ். இவர் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், சக மாணவியுடன் நேற்று காரில் தாம்பரத்திலிருந்து பெருங்களத்தூர் வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். பெருங்களத்தூர் சிக்னல் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சென்டர் மீடியனில் மோதி ஜிஎஸ்டி சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் காரின் உள்ளே சிக்கிய மித்லேஷ் மற்றும் மாணவியை மீட்டனர். தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Tags : Tambaram ,Mitlesh ,Manali ,Vandalur ,Tambarath ,Bangalore ,
× RELATED சென்னையில் வணிக அலுவலக இடங்களுக்கு...