- கே.கே. நகர்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- ரவிசங்கர்
- சென்னை கேகே நகர் குடியிருப்போர் நலச் சங்கம்
- சென்னை உயர்நீதிமன்றம்...
சென்னை: சென்னை கே.கே.நகர் பகுதியில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கே.கே.நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவிசங்கர் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குடியிருப்பு பகுதியான தங்கள் பகுதியில் அரசியல் கட்சியினர் உரிய அனுமதி பெறாமல் கூட்டங்களை நடத்துவதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டங்களுக்காக அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் ஒலி மாசு ஏற்படுகிறது. மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதால், தங்களது பகுதியில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்க கூடாது, என்று காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2024ம் ஆண்டு நடந்த கூட்டத்தை சுட்டிக்காட்டி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் எங்கு, எப்போது கூட்டம் நடத்தப்பட்டது என்ற எந்த விவரமும் மனுவில் இல்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
